மதுரை அருகே கோயிலில் பிரார்த்தனையை நிறைவேற்றிய விஜய் ரசிகர்
விஜய் ரசிகர்கள் இந்த நிகழ்வின் புகைப்படங்கள், வீடியோக்களை ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்;
திரைப்பட நடிகர் விஜய்யின் 30-வது ஆண்டு திரையுலக பயணத்தில் தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக, மதுரையில் விஜய் ரசிகர் முனிச்சாலை மகேஸ்வரன், பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு மொட்டை அடித்து பொங்கல் வைத்து அபிஷேகம் செய்து தனது காணிக்கையை நிறைவேற்றினார்.
மதுரை மற்றும் தென் பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களுடைய ஆதரவையும் வாழ்த்துகளையும்,விஜய்க்கு தெரிவித்து வருகிறார்கள்.
மதுரை முனிச்சாலையை சேர்ந்த மகேஸ்வரன், சிறு வயதிலிருந்தே திரைப்பட நடிகர் விஜய் பிறந்தநாள் மற்றும் அவருடைய திரைப்படங்கள் வெளிவரும் நாட்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் செய்வது, ஏழை எளியவர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை, ஏழைத் தொழிலாளிகளுக்கு இலவச டிரை சைக்கிள் இலவச அயன்பாக்ஸ் உள்ளிட்டவைகளை வழங்குவது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.
இன்று திரைப்பட நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் 30-ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோயிலில் முடிக்காணிக்கை அளித்து விஜய் பெயரில் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு, அந்த கோவிலில் கூடியிருந்த மக்களுக்கு அன்னதானமும் செய்து, தனது நேர்த்திக்கடனை நிரைவேற்றினார். இந்த நிகழ்வினை, மதுரை மற்றும் தென் பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களுடைய ஆதரவை ஆதரவையும் வாழ்த்துகளையும் விஜய்க்கு சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள்.