திருப்பரங்குன்றத்தில் அம்பாள் முருகனுக்கு வேல் கொடுக்கும் வைபவம்
சுப்பிரமணியசுவாமி, பூ சப்பர அலங்காரத்தில் திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில், சந்தசஷ்டி விழாவின் 5 -ஆம் நாள் நிகழ்ச்சியாக கோவர்த்தன அம்பிகையிடமிருந்து சண்முகருக்கு சக்திவேல் வழங்கும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது.
இதையொட்டி, மாலையில் உற்சவர் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது..பின்பு மாலை சுவாமி அம்பாளுடன் சர்வஅலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.அதேசமயம் மூலவர் சந்நிதிதியில் உள்ள சுப்பிரமணியசுவாமி, கற்பகவிநாயகர், பவளக் கனிவாய் பெருமாள், துர்க்கை, சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர், சூரனை வதம் செய்ய கேவர்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்கப்பட்டது. முன்னதாக, திருக்கோயில் நம்பிநாயர் பட்டருக்கு பரிவட்டம் கட்டி, கோவர்த்தனாம்பிகையிடம் வேல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கோயில்
ஸ்தானிகப்பட்டர் , சுப்பிரமணியசுவாமிக்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட சக்திவேலை அளித்து சிறப்பு தீபாராதனை செய்தார். பின்பு, சுப்பிரமணியசுவாமி, பூ சப்பர அலங்காரத்தில் திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை சூரசம்ஹாரம்: (செவ்வாய்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூரனை வதம்செய்யும் சூரசம்ஹார லீலை,,கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, கோயில் திருவாச்சி மண்டபத்தில் உள் திருவிழாவாக நடைபெறும். கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு. அனுமதிக்கப்படமாட்டார்கள்.