மதுரை அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற விசிக எதிர்ப்பு
கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்ற ஜேசிபி இயந்திரத்தைக்கொண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்;
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பெருங்குடியில் பொதுப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரிகள்
மதுரை, திருப்பரங்குன்றம், பெருங்குடி அருகே பொது பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற விசிக எதிர்ப்பு மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, பெருங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அப்பாஸ், முகம்மது, சல்மா ஆகிய 3 பேருக்கும் சொந்தமான இடத்தில் பொது பாதை 16 அடி உள்ளது.
இதனை, அப்பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை எதிர்த்து மூவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றி பெற்றனர்.இந்நிலையில், வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் காளியப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்ற ஜேசிபி இயந்திரத்தைக்கொண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து. ஜேசிபி எந்திரம் முன்பு மறியல் செய்தனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தில் தகராறு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் காவல் உதவி ஆணையாளர் ரமேஷ் மற்றும் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் கலைந்து செய்தனர் . இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.