மதுரை மாநகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: தமிழக முதன்மைச் செயலர் ஆய்வு
எல்லீஸ் நகரில் அறநிலையத் துறையின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தார்;
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் சார்பில், தெப்பக்குளம் அருகில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய உணவு வணிக வளாகம் அமைக்கப்பட உள்ள இடத்தினையும், மீனாட்சி தியேட்டர் அருகில் கிருதுமால் நதியில் தூர்வாரப்பட்ட பணியினையும், எல்லீஸ் நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலக வளாகத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியை அமைப்பதற்கான இடத்தினையும், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில், பந்தல்குடி கால்வாய் மற்றும் ஆனையூர் கண்மாயில் இருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாய் ஆகிய கால்வாய்கள் தூர்வாரப்பட்ட பணிகளையும், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள் மாடம் அமைப்பதற்கான இடத்தினையும், வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் வாடிப்பட்டி வட்டம், தனிச்சியம் கிராமத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் , மாநகராட்சி ஆணையாளர் .கா.ப.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி , மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் (இணை ஆணையர்) .செல்லத்துரை , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பெரியார் வைகை வடிநில கோட்டம்) .சுகுமாறன் , ஊரக வளர்ச்சி முகமை (செயற்பொறியாளர்) இந்துமதி , மற்றும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.