மதுரை கோயில்களில், தேய்பிறை பஞ்சமி: வராஹியம்மன் சிறப்பு பூஜைகள்!
மதுரை கோயில்களில், தேய்பிறை பஞ்சமி: வராஹியம்மன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தேய்பிறை பஞ்சமி: வராஹி அம்மன் பூஜை:
மதுரை:
மதுரை அண்ணாநகர், மேலமடை, தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியை யொட்டி, வராஹியம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வராஹியம்மன் சன்னதியில், சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரக, கணபதி ஹோமங்கள் நடைபெற்றது.
இதையடுத்து, வராஹியம்மனுக்கு, மஞ்சள், பால், பன்னீர்,சந்தனம் போன்ற அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கலச அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அலங்காரமாகி, சிறப்பு அர்ச்சணைகள், பூஜைகள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் பங்கேற்று , அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், மகளீர் ஆன்மீக குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல, மதுரை அண்ணாநகர், யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அம்மனுக்கு வராஹியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.
தாசில்தார் நகர், சித்தி விநாயகர் ஆலயத்தில்,துர்க்கை அம்மனுக்கு, வாராகி அம்மன் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.