மதுரை பகுதியில் வைகாசி விசாகத் திருவிழா

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளர் மனிதாபிமானத்துடன் உதவி செய்தார்;

Update: 2023-06-02 09:30 GMT

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற  வைகாசி விசாக விழாவில் பால்குடம் எடுத்துச் சென்ற பக்தர்கள்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பால்குட விழாவை ஒட்டி, காவல் துணை ஆணையர் சாய்பிரணித தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவில் அருகே பார்வையற்ற ஒருவர் கூட்டத்தில் சிக்கி வெளியே செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.இதனை அறிந்த, கரிமேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜேஷ்குமார் பாதுகாப்பு பணியில் இருந்தார்.கூட்டத்தில் சிக்கிய பார்வையற்றவரின் கையைப் பிடித்து நடந்து கூட்டத்தை ஒதுக்கி அவர் செல்லும் வழியில் கொண்டு போய் விட்டு வந்தார். காவல்துறை அதிகாரியின் இந்த மனிதாபிமான  உதவியை பொதுமக்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டிச்சென்றனர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், பாலமுருகனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக அர்ச்சனை வழிபாடு நடந்தது. இதை அடுத்து, பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை வழிபாடுகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரச்சாரங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஆன்மீக மகளிர் பக்தர் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News