சோழவந்தான் ஆலயங்களில் வைகாசி திருவிழா..!

சோழவந்தான் அங்காள ஈஸ்வரி அக்னி வீரபத்திரன் கருப்பசாமி சப்பானி கோவில் வைகாசி திருவிழா நடந்தது.

Update: 2024-05-26 06:20 GMT

 அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ அக்னி வீரபத்திரன் ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ சப்பானி மற்றும் 21 தெய்வங்கள் பெரிய கோவில் திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டு வைகாசி திருவிழா நடைபெற்றது. 

சோழவந்தான் அங்காள ஈஸ்வரி அக்னி வீரபத்திரன் கருப்பசாமி சப்பானி கோவில் வைகாசி திருவிழா நடந்தது.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் சப்பானி கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ அக்னி வீரபத்திரன் ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ சப்பானி மற்றும் 21 தெய்வங்கள் பெரிய கோவில் திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டு வைகாசி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கடந்த 23ஆம் தேதி மாலை வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பெட்டி எடுத்து மருளாடிகளுடன் பொதுமக்கள் கோவில் வந்து சேர்ந்தனர்.

24- ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு வைகை ஆற்றுக்கு சென்று சக்தி கிரகம் ஜோடித்து பூஜைகள் செய்து முளைப்பாரி ஊர்வலத்துடன் கோவிலை வந்தடைந்தனர். இரவு கோவில் முன்பு சத்திக்கிடாய் வெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை ஆறு முப்பது மணிக்கு வைகை ஆற்றுக்கு சென்று முளைப்பாரி கரைத்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை, கோவில் பூசாரிகள் மருளாடிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News