வைகை - முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

வைகை முல்லைபெரியாறு பாசன பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-17 15:20 GMT

தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவர் பி.ஆர் பாண்டியன் பேட்டி.

வைகை முல்லைபெரியாறு பாசன பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம். தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 5 மாவட்டங்களை சேர்ந்த 15 விவசாய அமைப்புகள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, வேலம்மாள் ஐடா ஹாலில் நடைபெற்ற முல்லைப் பெரியாறு பாசன பாதுகாப்பு சங்கக் கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சுதா மற்றும் தேனி மாவட்ட விவசாய சங்கச் செயலாளர் பூபாலன் ,தமிழக பாரம்பரிய விவசாய சங்க மாநிலத் தலைவர் ராவணன், மதுரை மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தமிழக விவசாய சங்க செயலாளர் அருண் ,சிவகங்கை மாவட்ட விவசாய சங்க செயலாளர் ஆதிமூலம், மேலூர் பாசன விவசாயிகள். சங்க முத்து மீரான் 15க்கும் மேற்பட் ட விவசய கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையில் கூடுதலாக நீரை சேர்க்கவும் 152 கன அடி தண்ணீர் சேர்ப்பதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளவும், மேலும், வகையில் உள்ள 30 அடிக்கு மேல் தேங்கி உள்ள கழிவுகளை நவீன எந்திரங்கள் மூலம் வெளியேற்றி கூடுதலாக நீர் சேர்க்கவும் ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும், முல்லைப் பெரியாறு பாசன சங்க கூட்டம் வரும் டிச. 27-ம் தேதி மதுரையில் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் முல்லைப்பெரியாறு பாசன பாதுகாப்பு சங்கம் குழுவினர் முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறினார்.

மேலும், வைகை நதியை பாதுகாக்கவும், புதிதாக அணை கட்ட மலைப்பாங்கான இடத்தை தேர்வு செய்யவும், தொழிற்சாலைகள் நிறுவனங்கள் போன்றவற்றில் வெளியேறும் நீர் நேரடியாக வைகை ஆற்றில் கலக்காமல் கழிவு நீரை சுத்திகரித்து வெளியிடவும், வைகை நதி மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்க த் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறினார்.

Tags:    

Similar News