மதுரையில் விற்பனை செய்த வடையில், பிளாஸ்டிக் கவர்: பொதுமக்கள் அதிர்ச்சி
Vadai Inside Plastic Cover மதுரை பழங்காநத்தம் பகுதியில் வடை கடையில் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் கவர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.;
மதுரையில் விற்பனை செய்த வடையில், பிளாஸ்டிக் கவர் இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்.
Vadai Inside Plastic Cover
பெரும்பாலும் கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களை உஷாராக கவனமுடன் பார்த்து வாங்க வேண்டும். அதுவும் சாப்பிடும் பொருட்கள் என்றால் ஒரு முறைக்கு இருமுறை கட்டாயம் செக் செய்து பார்த்து பார்த்து தான் சாப்பிட வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் மதுரையில் ஒரு சம்பவம் இன்று அரங்கேறியது. ஏங்க வடை வாங்கினால் அதற்குள் என்ன இருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை மட்டுந்தான் இருக்கும். ஆனால் வடையை உடைத்து சாப்பிட நினைத்த வாடிக்கையாளருக்கு பிளாஸ்டிக் கவர் வந்துள்ளதால் அவர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் இவர் ,நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் டயர் விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இன்று காலை தன்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு வடை வாங்குவதற்காக மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே ராணி கல்யாண மஹால் எதிரே உள்ள பெருமாள் என்பவருடைய வடை கடைக்கு சென்று 20 வடைகள் பார்சல் வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அஜித் குமார் பணிபுரியும் நேரு நகர் பகுதியில் இவர் பணிபுரியும் டயர் விற்பனை செய்யும் கடையில் தன்னுடன் பணிபுரியும் பணியாளர்களுக்கு வடையை பிரித்துக் கொடுத்துள்ளார். அப்போது ஒரு வடையை காளமேகம் என்ற நபர் சாப்பிடும் போது, உள்ளே பிளாஸ்டிக் பேப்பர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் ,இதுபோன்று கவனக்குறைவான செயல்களில் ஈடுபடும் உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது..உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தினந்தோறும் நகர் வலம் வந்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையிலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உறுதியை அளிக்கும் வகையிலும் அதிரடிசோதனைகளை அரங்கேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது.