மதுரை ஒத்தக்கடை அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் பலி

Road Accident News - மதுரை ஒத்தக்கடை அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் இருவர் பலியானார்கள்.;

Update: 2022-08-04 09:14 GMT

லாரி மீது மோதிய வேன் நொறுங்கி கிடக்கும் காட்சி.

Road Accident News - கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து ,தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு குளிக்க சென்ற வேன் மதுரை ஒத்தக்கடை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, தண்ணீர் லாரி மீதி மோதி விபத்தில், சம்பவ இடத்தில் இருவர் பலி யாயினர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலையில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக ஒப்பந்த முறையில் தண்ணீர் லாரி செயல்பட்டு வருகிறது. இந்த வாகனம் சாலையின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், வேகமாக வந்த வாகனம் தண்ணீர் லாரி மீது மோதியதில் இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பலியான பயணி சௌந்தர் மற்றும் வேன் ஓட்டுநர் பிரபு ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீரில் லாரி மீது வழக்குப் பதிவு செய்து ஒத்தக்கடை போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News