வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
உணவு பொருள் தடுப்பு காவல்துறையினர் மதுரை மாவட்டம், சோழாங்குருணி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்;
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து ,சென்னை உணவு கடத்தல் பிரிவு இயக்குநர் வன்னிய பெருமாள் தலைமையில், மதுரை மண்டல உணவுப் பொருள் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட உணவு பொருள் தடுப்பு காவல்துறையினர், மதுரை மாவட்டம், சோழாங்குருணி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தில் 480 கிலோ ரேசன் அரிசியும் மற்றும் மற்றொரு வாகனத்தில் 400 கிலோ ரேசன் அரிசியும் இரு வாகனங்களிலும் மொத்தம் 880 கிலோ ரேஷன் அரிசி கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரேசன் அரிசியை கடத்திய மதுரை சேர்ந்த சங்கிலி கருப்பன் மற்றும் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சேர்ந்த வீரபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் வாகனத்தை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்து 880 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த சங்கிலி கருப்பன் மற்றும் வீரபாண்டியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.