மதுரையில் கஞ்சா விற்பனை செய்ததாக இருவர் கைது
மதுரையில் கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை ஜெயந்திபுரம் பாரதியார் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக ஜெயந்திபுரம் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் சந்தேகப்படும் வகையில், அமர்ந்திருந்த மல்லிகா வயது 56 . விசாரணை செய்த போது, அவரிடம் 90 கிராம் கஞ்சா மற்றும் 27 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயந்திபுரம் காவல் துறையினர் மல்லிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று, மதுரை சம்பட்டிபுரம் பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா விற்பதாக எஸ். எஸ். காலனி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ,சம்பட்டிபுரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில், அமர்ந்திருந்த முகமது மைதீன் வயது 43. விசாரணை செய்த போது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை, எஸ். எஸ். காலனி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்..