விளக்குகள் எரியாத திருப்பரங்குன்றம் சுரங்கபாதை: கண்டுகொள்ளுமா மாநகராட்சி ?

இது ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையாகும் .

Update: 2021-11-23 00:45 GMT

விளக்குகள் எரியாத திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கபாதை 

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப் பாதையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விளக்குகள் எதுவும் எரியவில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில், ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையாகும். மேலும், இப்பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். சுற்றுலாத்தலமான திருப்பரங்

குன்றத்தில் ரயில்வே, சுரங்கப் பாதையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெரு விளக்கு எரியவில்லை என புகார் எழுந்தும், கண்டும் காணாமல் , மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்ற சம்பவங்கள் நடந்த பிறகுதான் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்கள் மீதும் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. திருப்பரங்குன்றம் ரயில்வே விளக்குகள் எரியுமா பொறுத்திருந்து பார்ப்போம் போராட்டம் நடக்கும் முன் என சமூக ஆர்வலர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Tags:    

Similar News