மதுரையில் டிராக்டர் ஓட்டுநர் வீட்டில் தீ விபத்து: மின்சாதன பொருட்கள் சேதம்
மதுரையில் டிராக்டர் ஓட்டுநர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.;
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கப்பலூர் அருகே தனிக்கொடி இவரது வீட்டில், டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்யும் ராதாகிருஷ்ணன், வயது 38 .என்பவர் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை 10 மணி அளவில் அவர் வீட்டில் இருந்து புகை வருவதாக தெரியவந்தது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் தீ மளமளவென எரியத் தொடங்கியது.
சம்பவ இடத்திற்கு விரைந்த திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை உடனடியாக அணைத்தனர் .
எனினும், மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து, திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என தெரியவருகிறது .