மதுரை விமான நிலையத்துக்கு மூன்று நவீன ஆம்புலன்ஸ்கள்

அவசர காலத்தில் உதவும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு என தனி ஆம்புலன்ஸ் வேண்டுமென மதுரை விமான நிலைய ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Update: 2023-04-21 17:00 GMT

மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்று ஏசி ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது; இதனை, மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தென் மாவட்டங்களில் முக்கியமான விமான நிலையமாக திகழும் மதுரை விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மதுரை விமான நிலையத்திலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 18 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால், மதுரைக்கு வரும் விமான பயணிகள் அவசர காலத்தில், மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வருவது தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸை நாட வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், அவசர காலத்தில் உதவும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு என தனி ஆம்புலன்ஸ் வேண்டுமென மதுரை விமான நிலைய ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு, இந்திய விமான நிலையங்களின் ஆணையக் குழு மதுரை விமான நிலையத்திற்கென அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மூன்று ஏசி ஆம்புலன்ஸை வழங்கியது. இதனை, மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் ரிப்பன் வெட்டி செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News