மதுரையிலிருந்து சென்னை செல்லும் மூன்று விமானங்கள் திடீர் ரத்து

மூன்று விமானங்களும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது;

Update: 2023-10-19 16:30 GMT

பைல் படம்

மதுரையில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானங்கள் இரண்டும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்றும் மொத்தம் மூன்று விமானங்களும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ,மும்பை, டெல்லி, கோவா என உள்நாட்டு விமான சேவைகள் நடந்து வருகிறது.இதே போல், இலங்கை, சிங்கப்பூர், துபாய் ஆக வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் ஐந்து மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு சென்னை சென்றடையும்.அதேபோல் ,இரவு 8 மணி 15 நிமிடத்திற்கு மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து சென்னைக்கு இரவு கடைசி விமான ஸ்பைஸ் ஜெட் விமான இரவு 9 மணிக்கு மதுரைலிருந்து புறப்பட்டு செல்லும் இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்று விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்தடுத்து , மதுரையில் இருந்து சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமானத்தில் செல்ல பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

Tags:    

Similar News