திருவாலவாயநல்லூரில் கபாடி போட்டி: வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைப்பு
திருவாலவாயநல்லூரில் நடைபெற்ற கபாடி போட்டியை வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் ஊராட்சியில், ஏகேஎஸ் அருண் மற்றும் ஷாலினி நினைவு கபாடி குழு இணைந்து நடத்திய கபடி போட்டிகள் சுமார் 85 அணிகள் கலந்து கொண்டன.
மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியினை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் .எல். ஏ. துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.
இந்தப் போட்டியில், முதலாவது பரிசினை குருவித்துறை வல்லவன் பார்ட்னர்ஸ் அணியும் இரண்டாவது பரிசினை ,காடுபட்டி அணியும், மூன்றாவது பரிசினை, செல்லூர் அணியும், நான்காவது பரிசினை பேட்டை கிராமம் சோழவந்தான் ஆகிய அணிகள் பெற்றது.
பரிசுகளை, திருவாளர் ஊராட்சி மன்ற செயலாளர் சகுபர்சாதிக், திமுக மாவட்ட துணைச் செயலாளர் புதூர் சேகர், முத்தையா பாசறை மற்றும் ஜே பி கிளப் உள்ளிட்டோர் இணைந்து வழங்கினார்.
முன்னதாக, போட்டிகளை சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையேற்று துவக்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், சித்தாலங்குடி ஒன்றிய கவுன்சிலர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் சகுபர்சாதிக் வரவேற்றார். இதில், திமுக மாவட்ட துணைச் செயலாளர் புதூர் சேகர் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் கபடி விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.