திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர்மோர் பந்தல்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.;
கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர்ப் பந்தல்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், தமிழக திருக்கோயில் வாசல்களில் நீர்மோர் பந்தல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை அருகில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் கோவில் வாசலில், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக, நீர் மோர்ப்பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களில் பலர் ஆர்வமுடன் நீர்மோர் பந்தலை அணுகி, தாகம் தணித்தனர்.