பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்து வழிப்பறி செய்தவர் கைது
இரு வேறு சம்பவங்களில் ஈடுபட்ட வழிப்பறி கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.;
பயங்கர ஆயுதங்களுடன் இரு வேறு சம்பவங்களில் ஈடுபட்ட வழிப்பறி கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மதுரை, எஸ். எஸ். காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கென்னெட் கால்நடை மருத்துவமனை பகுதியில், கண்ணதாசன் தெருவை சேர்ந்த மௌலி கண்ணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி செய்யபோது தர மறுத்த ஆத்திரத்தில் மவுலி கண்ணனை அவர்கள் கத்தியால் குத்தி இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் பறித்து தப்பி ஓடி உள்ளனர்.
இதே போன்று, பாரதியார் மெயின் ரோட்டை சேர்ந்த ஜாபர் ஷெரிப் என்பவரையும் மூன்று பேர் கொண்ட மர்ம செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.இது தொடர்பாக, சம்பவம் குறித்து மதுரை எஸ். எஸ். காலனி போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரில் இரண்டு பேர் சிலைமான் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதை, தொடர்ந்து திருப்பாச்சேத்தியை சேர்ந்த சிவா ( 22). என்பவரையும் கைது எஸ் எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.