பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க உதவிய காவலரின் மனிதநேயம்
மதுரையில் பரபரப்பான பெரியார் பேரூந்து நிலையம் அருகே சாலையை கடக்க பார்வையற்றவருக்கு உதவிய தலைமை காவலரின் மனித நேயம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.;
மதுரையில் பரபரப்பான பெரியார் பேரூந்து நிலையம் அருகே சாலையை கடக்க பார்வையற்றவருக்கு உதவிய தலைமை காவலரின் மனித நேயம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
காவல் துறையினர் குற்றம் செய்பவர்களை தண்டிக்கவும் , குற்றங்களை தடுக்கவும், அதிகாரம் படைத்த துறையாகும். காவலர்கள் சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது.
மதுரை திடீர்நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் உதயராஜன் (வயது 38). இவர் நேற்று பணியின்போது, பார்வையற்ற ஒருவர் வெகு நேரம் சாலையை கடக்க சிரமப்பட்டதை பார்த்து மனித நேயத்துடன் சாலையை கடக்க உதவினார்.
காவல்துறை நண்பனாக இருந்தால் சமுகத்திற்கு பெருமை சேரும். இவரை போல, பல காவலர்களின் செயலால் காவல்துறை மீது கண்ணியத்தையும் மரியாதையையும் உயர்த்துகிறது.
இன்றும் காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு இவரை போன்ற காவலர்களால் மரியாதை நிலைநிறுத்தப்படுகிறது எனலாம்.