மதுரையிலிருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் சென்ற இதயம்
வீரணன் என்ற நோயாளி மூளைச் சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்பை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்;
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து உடல் உறுப்பு தானம் மூலம் பெறப்பட்ட இதயம், மற்றும் மார்பக எலும்புகள் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்றது:
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட வீரணன் என்ற நோயாளி மூளை சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்பை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். இதனை அடுத்து, வீரணன் இதயம் மற்றும் மார்பக எலும்புகள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்துவதற்காக இன்று காலை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
பின்னர் ,அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கு அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்துவதற்காக கொண்டு செல்லப்படுகிறது. மதுரையில் இருந்து மனித உடல் உறுப்புகள் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் முதல் முறையாக கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஜிப்சன் ஏவியேசன் தனியார் நிறுவனம் மூலம் விமானிகள் கேப்டன் டோலி, கேப்டன் அபே சிங் இயக்கினர்.விமானத்தில்டாக்டர் அகஸ்டின் ஜோ ஐசக் ஜார்ஜ், மற்றும் டாக்டர் ஸ்ரீ ராமன் மற்றும் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்பு பெட்டியுடன், மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்போலா மருத்துவமனை கொண்டு செல்லப்படுகிறது.