மதுரை அருகே அம்மாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த சிறுமி
மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம் 98வது வார்டு திமுக வேட்பாளர் சுவிதாவுக்கு ஆதரவாக அவரது 5 வயது மகள் வாக்கு சேகரித்தார்;
திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் போட்டியிடும் தனது அம்மாவிற்காக வீடு வீடாக பிரசாரம் செய்த 5வயது சிறுமி:
மதுரையிநடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சித் தலைவர்களும் விறுவிறுப்பாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பல வேட்பாளர்கள் நூதனமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம் 98வது வார்டு திமுக வேட்பாளர் சுவிதா என்பவர் போட்டியிடுகிறார். அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, அவருடைய ஐந்து வயது மகள் ரக்ஷிதா வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும், ஒலிபெருக்கியில் தனது அம்மா சுவிதாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு தன் மழலை மொழியில் பேசியது அந்த பகுதியில் வியப்பில் ஆழ்த்தியது.