மதுரையிலிருந்து துபைக்கு அக்.1-ஆம் தேதி முதல் விமான சேவை

இதற்காக பயணிகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது .இதன்மூலம் 175 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்;

Update: 2021-09-30 08:26 GMT

பைல் படம்

அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து துபைக்கு விமான சேவை தொடங்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. நாளை  (அக்- 1 )  மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடங்கியுள்ளது.இதற்காக பயணிகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது .இதில்,175 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், விமானத்தில் பயணம் செய்யும், பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News