மதுரையில் காங்கிரஸார் சாலை மறியல் போராட்டம்

மதுரையில் ரயில் மறியல் போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததால் காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர்;

Update: 2023-04-15 12:45 GMT

மதுரையில்  ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸார்

ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், போலீசார் தடுத்ததால் சாலை மறியல் ஈடுபட்டனர்:

மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 120-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

போலீசார் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டு இருந்த காரணத்தினால், அவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட முடியாமல் போனது. இருப்பினும் ,தடுப்பு வேலிகளை உடைத்து விட்டு உள்ளே செல்ல முயன்றனர்.போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் 120க்கும் மேற்பட்டோர் 15 நிமிடம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், சுமார் 15  நிமிடங்கல் கடுமையான போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. பின்பு, போலீசாரின் சமாதான பேச்சு வார்த்தை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியினர் கைதாகினர் கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதில், பெண்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News