மதுரை அருகே திருநகரில் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

உண்டியலில் இருந்த காணிக்கை ரூபாய் 10 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்;

Update: 2021-10-15 09:33 GMT

பைல் படம்

திருநகரில் கோயில் உண்டியலை உடைத்து  திருடிய சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை திருநகரில் லயன் சிட்டி கண்மாய் கரையில் காரை முனியாண்டி கோயில் உள்ளது. சம்பவத்தன்று ,இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைத்திருந்த உண்டியலை உடைத்து, உண்டியலில் இருந்த  காணிக்கை  ரூபாய் 10 ஆயிரத்தை  திருடிச் சென்று விட்டனர். இந்த  சம்பவம் தொடர்பாக நடராஜ பாரதி என்பவர் அளித்த புகாரின்பேரில், திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News