எதுவுமே இல்லாத தமிழக பட்ஜெட்: முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கருத்து

திமுக அரசின் பட்ஜெட் அரைத்த மாவையே அரைத்த பட்ஜெட் ஆக எதுவுமே இல்லாத பட்ஜெட். என்றார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ;

Update: 2022-03-26 16:15 GMT

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சுகாதார வளாகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவற்றை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர்ராஜூ மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

திமுக அரசின் பட்ஜெட் என்பது அரைத்த மாவையே அரைத்த பட்ஜெட் ஆக உள்ளது: எதுவுமே இல்லாத பட்ஜெட். புதிதாக ஒன்றும் இல்லாத பட்ஜெட். என்றார்  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ .

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ மாத்தூர் பகுதியில் 33 லட்ச ரூபாய் மதீப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சுகாதார வளாகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவற்றை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர்ராஜூ மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை பெற முதல்வர் வெளிநாடு செல்வது வழக்கமான ஒன்று தான். முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட எல்லா இடத்திற்கும்,நாடுகளுக்கும் சென்றுள்ளார்.தமிழகத்திற்கு அதிகப்படியான முதலீட்டை அப்போதைய முதல்வர் எடப்பாடியார் கொண்டு வந்தார்.தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்.

கொரானா காலத்திலும் தமிழகத்தின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாத்தவர் எடப்பாடியார்.பட்ஜெட் முடிந்தவுடன் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள தமிழக முதல்வரிற் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.திமுக அரசின் பட்ஜெட் என்பது அரைத்த மாவையே அரைத்த பட்ஜெட் ஆக உள்ளது. எதுவுமே இல்லாத பட்ஜெட். புதிதாக ஒன்றும் இல்லாத பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் அம்மா உணவகத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் உள்ளது.

அதிமுக அரசு கொண்டு வந்த எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை, ஏழை எளிய திட்டங்களை முடக்க நினைப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். திமுக அரசின் செயல் மக்களால் விமர்சிக்கப்பட போகிறது.தந்தைபெரியார் கருத்தை மொழி பெயர்த்து உலகமெல்லாம் கொண்டு செல்வதாக கூறிவிட்டு, அவருடைய வழியில் செல்வதாக கூறும் திமுக பெரியார் வழியில் செல்லும் அதிமுக கொண்டு வந்த பெண்கள் நல திட்டங்களை நசுக்குவது பெரியாரின் கொள்கைக்கு குழி தோண்டி புதைப்பது போல.பட்ஜெட்டில் யானையை எதிர்பார்த்த மக்களுக்கு பூனை கூட கிடைக்கவில்லை.

பட்ஜெட்டில் தமிழக அமைச்சர்களை சமாளிப்பதற்காகவும், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளனர், திமுகவினர்ஊழல் கட்சி நிதி பெற உள்ளனர் என்ற பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , நல்ல கருத்தை தான் சொல்லி உள்ளார். ஒரு ஐபிஎஸ் அதிகாரி சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.அவர் சொல்லும் குற்றச்சாட்டில் அர்த்தம் இருக்கும்.கடந்த ஆட்சி கொண்டு வந்த திடட்த்தை முடக்காமல் ,அதை மேம்படுத்தி செயல்படுத்தலாம்.எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை அதன் நோக்கத்தை கலைஞர் கருணாநிதி புரிந்து கொண்டு சீர்படுத்தி செழுமைப்படுத்தினார்.

இந்த அரசு அதிமுக திட்டங்களை உள்நோக்கத்தோடு காழ்ப்புணர்ச்சியோடு மூடி மறைத்து நசுக்கி கொச்சைப்படுத்தும் வகையில் மூடு விழா நடத்துகின்றன்.வழக்கம் போல, வைகை அணையில் தண்ணீர் உள்ளது. அழகர் ஆற்றில் இறங்க திமுக அரசு தண்ணீர் திறந்துவிடும். சித்திரை த்திருவிழாவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

ரவுடிகள் தொல்லை உள்ளதாக டிஜிபியே சொல்லியுள்ளார்..சித்திரை திருவிழாவிற்கு இலட்சக்கணக்கான மக்கள் வர உள்ளனர். இதில் பிக்பாக்கெட் குற்றவாளிகள் தொல்லை உள்ளதால் காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.மகளிர்க்கு பேருந்தில் இலவசம் எனச் சொல்லி 30, 40 பேருந்துகளுக்கு இடையில் ஒரேயொரு பேருந்தை இயக்குகின்றனர். 48,000கோடி கடன் உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். நகரப்பேருந்தில் மகளிர்க்கு இலவசம் திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை.திமுக அரசு வந்தாலே குளறுபடி தான். திமுக ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து.அதிமுக ஆட்சிக்கு வரும் என்று தான் மக்கள் எதிர்பார்த்தார்கள்.

 திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மதுபான ஆலையை இழுத்து மூடுவோம், மதுக்கடைகளை அடைப்போம் என கூறினார்கள். இந்த அரசின் அவலநிலை குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.தற்போது ,பேருந்தில் மாணவிகள் மதுபானம் குடித்தது  குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி கனிமொழியிடம் தான் கேட்க வேண்டும்.

கூட்டுறவு சங்கத்தில் தவறு செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வந்தோம். அதன்காரணமாக அதிகரிகளும் முன்னாள் அமைச்சர்களும் கூட தப்பிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கை இருந்தது.எங்கள் ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கத்தில் தவறுகள் களையப்பட்டது. தற்போது புதிய அலுவலர் ஒருவரை நியமனம் செய்வதில் கவலை இல்லை. அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் 62ஆயிரம் கோடி டெபாசிட் உயர்த்தி காண்பித்தோம். ஆனால் தற்போது கூட்டுறவுத்துறையில் ஊழல் என மிகப்பெரிய பூதாரகர குற்றச்சாட்டை சொல்லியது எங்கே கொண்டு செல்லும் என தெரிய வில்லை என்றார் செல்லூர் ராஜு..

Tags:    

Similar News