சுவாதி நட்சத்திரம்: நரசிம்மருக்கு சிறப்பு பூஜை வழிபாடு
மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;
மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில், மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, இங்குள்ள நரசிம்மருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
இதே போன்று ,இந்த மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில், பக்தர்கள் கலந்து கொண்டு, பிரசாதம் பெற்றுச் சென்றனர் .இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர்.