மதுரை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர விழா
மதுரை அண்ணாநகர், மேலமடை, அருள்மிகு சௌபாக்கி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது;
மதுரை சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர விழா நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர், மேலமடை, அருள்மிகு சௌபாக்கி விநாயகர் ஆலயத்தில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை ஒட்டி ,இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மருக்கு பக்தர்களால் பால் , தயிர், இளநீர் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து ,நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு அலங்காரம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடந்தது. இதை அடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இத்திருக்கோவிலே, மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று காலை 9 மணி அளவில் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று , சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாக குழு மற்றும் ஆன்மீக மகளிர் பக்தர் குழு ஆகியோர் செய்து வருகின்றனர்.