மதுரை அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு: போலீஸார் தடியடி.
Stone Pelting On Government Bus மதுரை அருகே அரசு பஸ்மீது திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தில் கும்பலால் போலீசாரின் அதிரடியான தடியடிப் பிரயோகம் நடந்தது.;
மதுரை அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது.
Stone Pelting On Government Bus
கரூரில் கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டியன் உடல்இறுதி ஊர்வலம் மதுரை சிந்தாமணி 4 வழி சாலையிலிருந்து திரும்பும் போது, ஊர்வலத்தில் வந்த சிலர் அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்நடைபெற்றது.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, சொட்ட தட்டி சென்ற 47 எண் பேருந்து சிந்தாமணி அருகே சென்ற போது,
ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலத்தில் வந்த நபர்கள் கல்வீசி தாக்குதலில் அரசு பேருந்தின் முன்பக்க , பின் பக்க கண்ணாடிக் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து, போலீஸார் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
இனி வரும் காலங்களில், இது போன்ற ஊர்வலங்கள் வரும்போது ,அதிகப்படியான போலீசாரை பாதுகாப்பணியில் ஈடுபடுத்துவதுடன் ,அரசு சொத்துக்களை சேதப்படுத்துவது மீது ,கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் , அரசு பஸ் மீது கல்வீசியவர்களை, மதுரை நகர காவல் துறையினர் விரைவில் கைது செய்து, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.