திருப்பரங்குன்றம் கோயிலில் பணத்தை திருடியவரை தேடும் போலீஸார்
மர்ம நபர் ஒருவர் பரஞ்ஜோதி பேண்ட் பையில் வைத்திருந்த ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிள்ளார்;
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்தவர் பரஞ்சோதி இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ,மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.நேற்று முகூர்த்த நாள் என்பதால், ஏராளமான திருமணம் நடைபெற்றதால் கோயிலில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் பரஞ்ஜோதி பேண்ட் பையில் வைத்திருந்த ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிள்ளார். கோவிலில் இருந்து வெளியே வரும்போது தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணம் காணவில்லை என்பதை அறிந்த, பரஞ்சோதி உடனடியாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அதே நாளில், பெருமாள் என்பவரிடமிருந்து 11 ஆயிரம் ரொக்க பணமும் திருடப்பட்டுள்ளது. எனவே, இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.