மதுரை ஒத்தக்கடை நரசிம்மர் கோவிலில்,ஆடி சுவாதியையொட்டி சிறப்பு திருமஞ்சனம்
மதுரை ஒத்தக்கடை நரசிம்மர் கோவிலில்,ஆடி சுவாதியையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட கோயில்களில் ஆடி சுவாதியை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் நரசிம்மர் கோவிலில்,ஆடி சுவாதியை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நரசிம்மர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில் ஏராளளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதே போல, மதுரை அண்ணா நகர் ,தாசில்தார் நகர் ,அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், உள்ள யோக நரசிம்மருக்கு, பக்தர்கள் சார்பில்,ஆடி சுவாதி முன்னிட்டு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. நரசிம்மருக்கு, மஞ்சள் பொடி, பால் ,திரவிய பொடி,சந்தனம்,பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்கள்,துளசி மாலை அணிவித்து, பானகம் படைத்தும், நரசிம்மருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.
பெண்கள் பங்கேற்று நரசிம்மருக்கு விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு கோவில் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பெண்கள் பக்தர் குழுவினர் செய்திருந்தனர். இந்த கோவிலில், மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மருக்கு காலை 9 மணி அளவில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.