மதுரையில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் காந்தி தொடக்கம்

இம்முகாமில் நோய்களின் தன்மைகளுக்கு ஏற்ப இலவசமாக இ.சி.ஜி, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது;

Update: 2023-07-18 03:00 GMT

கைத்தறித்துறை அமைச்சர் காந்தி


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்துத்தார்.

கைத்தறித் துறை மதுரை சரகம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, உதவி இயக்குநர் கைத்தறித் துறை மற்றும் துணை இயக்குனர் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இம்முகாமில், பொது மருத்துவம்,தாய் சேய் நலம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய், புற்று நோய் ஆகியவைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கப்பட்டது. இம்முகாமில் நோய்களின் தன்மைகளுக்கு ஏற்ப இலவசமாக இ.சி.ஜி, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில், 800க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிலையூர் பகுதியில், உள்ள மதுரை வண்டியூர் கைத்தறி குழுமம் பொது பயன்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் எம்.எச்.265 வெற்றி அனுமான் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் தேவேந்திரா சேலை, கோடம்பாக்கம் கராச்சி புட்டா சேலை, உருவம் புட்டா சேலை, காட்டன் சேலை மற்றும் சுங்குடி சேலை உற்பத்தி செய்யப்படும் தறிகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார். மேலும், அங்குள்ள நெசவாளர்களோடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் , கலந்துரையாடிய போது தற்போது 10 அடிப்படை கூலி உயர்வு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக நெசவாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கைத்தறி ஆதரவுத் திட்டம் மூலம் 120 ஜக்காட் பெட்டி தார் சுற்றும் இயந்திரம் வழங்கப்பட்டது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், வெளிச்சந்தை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனைக்கு ஏற்ப அதிக உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக உள்ளதாகவும் காலம் விரயம் கட்டுப்படுத்தப்படுவதாகவும் நெசவாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து , கோ-ஆப்டெகஸ் அங்கையர்கண்னி பட்டுமாளிகை மற்றும் செல்லுரில் புதிதாக கட்டப்படும் கோ-ஆப்டெக்ஸ் கட்டிடத்தையும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர்  பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில், கைத்தறி துறை ஆணையர் கே.விவேகானந்தன், துணிநூல் துறை இணை இயக்குநர் மகாலிங்கம் , துணிநூல் துறை துணை இயக்குநர் இணை செந்தில்குமார், உதவிஇயக்குநர் ரகுநாத் உதவி அமலாக்க அலுவலர் வரதராஜன், மருத்துவர்கள், ஊராட்சி தலைவர் பசும்பொன், கைதறித் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News