மதுரையில் பஸ் நிறுத்தங்களில், நிற்கும் ஆட்டோக்கள்..! போலீஸார் கவனிப்பார்களா..?
பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் பஸ்ஸில் ஏறமுடியாமல் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுளளது.
மதுரையில் பஸ் நிறுத்தங்களில் திடீரென நிறுத்தப்படும் ஆட்டோக்கள்.
மதுரை.
மதுரை மாவட்டத்தில்,பல இடங்களில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் அவதி அடைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், பஸ் நிறுத்தங்கள் அருகே ஷேர் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி ஆட்களை ஏற்றுவதால்,பஸ் நிறுத்தங்களில் பஸ்ஸுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் பஸ்கள் வந்ததும், பஸ்ஸில் பயணிக்க முடியாமல், இடையூறு ஏற்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை நகரில், அண்ணாநகர், அண்ணாநிலையம், கோரிப்பாளையம், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், திருப்பரங்குன்றம், திருநகர், சோழவந்தான், திருமங்கலம், மேலூர்,சமயநல்லூர், மதுரை தெற்கு வாசல், தெப்பக்குளம், புதூர் உள்ளிட்ட பல பஸ் நிறுத்தங்களில் ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நின்று பயணிகளை அழைத்து ஏற்றுவதால், அவ்வழியாக வரும் பஸ்கள் நிறுத்தத்தை விட்டுத் தள்ளி நிறுத்துகிறார்கள். அதனால் பயணிகள் ஓடிச்சென்று ஏறுகிற அவல நிலை ஏற்படுகிறது.
மேலும், பஸ்ஸில் படிக்கட்டு பக்கம் ஏறும் போது ஆட்டோக்கள் குறுக்கிடுவதால், பல பயணிகள் அவ்வப்போது லேசான காயம் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது . போலீசார், பஸ் நிறுத்தம் என்று தகவல் பலகை வைத்தாலும், ஆட்டோக்கள் போலீசார் எச்சரிக்கை மீறி பஸ் நிறுத்தங்கள் நிறுத்துகின்றனர்.
இது குறித்து, போக்குவரத்து போலீசார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், ஆகியோர்களுக்கு பொதுமக்கள் சார்பில், புகார் அனுப்பியும், நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதை, போக்குவரத்து போலீசாரும் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மதுரை நகரை பொறுத்தவரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும் சிட்டி பஸ்களாக ஆட்டோக்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது. மேலும், மதுரை அருகே கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப்பள்ளி அருகே பஸ் நிறுத்தத்தில்,காலை நேரங்களில் ஆட்டோக்கள் வரிசையாக சாலையை மறித்து ஆட்களை ஏற்றுவதால், மதுரை- சிவகங்கை சாலையில், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
கருப்பாயூரணி காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் க ருப்பாயூரணி பஸ் நிறுத்தப்படும் ஆட்டோக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரத்தில் இதைப் பார்க்கும் மக்கள், அரசானது, ஆட்டோக்களை, சிட்டி பஸ்களாக செயல்பட அனுமதிக்கிறதோ, என்றும் என, கருதும் அளவுக்கு மதுரை ஆட்டோ இயக்கம் அதிகமாக காணப்படுகிறது. பல ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, மதுரை போக்குவரத்து துணை ஆணையர், உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், ஆகியோர்கள் அவ்வப்போது ஆட்டோக்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும்,சிட்டி பஸ்களாக செயல்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் எனவும், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்து துணை ஆணையர் ஆகியோர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில்,அய்யனார் பொட்டல் பஸ் நிறுத்தம், மாரியம்மன் கோயில் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்துவதால், அரசு பஸ்களில் பயணிக்க இடையூறாக உள்ளதாகவும், சோழவந்தான் காவல் ஆய்வாளர், பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தும் ஆட்டோக்களை உடனடியாக அப்புறப்படுத்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உத்திரவிட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.