மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு ஏழு நாட்கள் விடுமுறை
கொரோனா தொற்று காரணமாக ஒரு வாரத்துக்கு விடுமுறையை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது;
கொரோனா பரவல் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கத்துக்கு ஏழு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.