மதுரை அருகே கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

மதுரையில் அரையாண்டு விடுமுறையை கண்மாயில் நண்பர்களோடு குளித்து உற்சாகமாக கொண்டாடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்;

Update: 2023-12-23 12:15 GMT

சிறுவன் மூழ்கி இறந்த கண்மாய்

மதுரையில் அரையாண்டு விடுமுறையை கண்மாயில் நண்பர்களோடு குளித்து உற்சாகமாக கொண்டாடிய சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை பார்த்து வரும் அசோக் என்பவரின் 13 வயது மகன்  வர்ஷன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், சிறுவன் பள்ளி அரையாண்டு விடுமுறையை யொட்டி அப்பகுதியைச் சேர்ந்த தனது 3 நண்பர்களோடு மாடக்குளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நான்கு பேரும் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீச்சல் தெரியாத சிறுவன்(வர்சன்) திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மற்ற சிறுவர்கள் அக்கப் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி அரையாண்டு விடுமுறையை நண்பர்களுடன் கன்மாயில் குளித்து விளையாட நினைத்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News