சசிகலா விவகாரம்: மதுரை விமான நிலையத்தில் நழுவிய ஓ.பி.எஸ்

சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த நிருபர்களின் கேள்விக்கு ஐயோ சாமி என ஓபிஎஸ் நழுவிச் சென்றார்;

Update: 2022-03-07 15:45 GMT

பைல் படம்

மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டி:

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எந்த ஒரு திட்டமும் தொடங்கப்பட வேண்டும் என்றால் தமிழ்நாட்டினுடைய அனுமதி பெற்று தான் கட்ட முடியும் கேரள அரசின் இஷ்டம்போல் செயல்படுத்த முடியாது. அதிமுக  மகளிர் அணி செயலாளர் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.அதில், கலந்து கொள்ள செல்கிறேன்.இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள் தாய்மார்கள் சகோதரிகள் அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு ஐயோ சாமி என  ஓபிஎஸ் நழுவிச்சென்றார்.

Tags:    

Similar News