மதுரை பகுதியிலுள்ள கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழா

மதுரை மேலமடை தாசில்தா நகர் அருள்மிகு யோக சனீஸ்வரன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

Update: 2023-03-29 14:00 GMT

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் கோயிலில், சனிப்பெயர்ச்சியையொட்டி, யோக சனீஸ்வரருக்கு நடந்த பூஜை.

மதுரை மேலமடை தாசில்தா நகர், அருள்மிகு யோக சனீஸ்வரன் ஆலயத்தில், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. முன்னதாக, சௌபாக்கிய ஆலயத்தில், நவகிரக ஹோமம், நடைபெற்றது.

இதை தொடர்ந்து,யோக சனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதே போன்று, மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு,சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நவகிரகம் அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, பால விநாயகர் ஆலய அர்ச்சகர் ஈஸ்வர பட்டர் செய்திருந்தார். இதே போன்று, மதுரை அண்ணா நகர் வைகை விநாயகர் ஆலயம், மதுரை யானை குழாய் முத்துமாரியம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தனிப்பெயர்ச்சி் குறித்து ஆன்மிக அன்பர்கள் கூறியதாவது: நவகிரகங்களில் சனிபகவானை ஆண்டுகிரகம் என்போம். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆவார் சனிபகவான். ஒருவர் வாழ்வில் முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களின் சொந்த ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பார். இதை அடிப்படையாக வைத்தே முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை முப்பது ஆண்டுகள் வீழ்ந்தவரும் இல்லை என்னும் பழமொழி உருவானது.சனிபகவான் கெடுபலன்களைத் தரும் கிரகம் அல்ல. அவர் தர்மவான். நம் செயல்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர். வாழ்க்கையின் எந்தவிதமான பிரச்னையையும் எதிர்கொள்வதற்குரிய துணிச்சலையும், இயல்பாகக் கையாள்வதற்குரிய அனுபவத்தையும் சனி பகவான் ஒருவரின் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் தருவார். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனை கைவிடமாட்டார் என்பதே ஐதீகம் என்றனர் 

Tags:    

Similar News