அலங்காநல்லூர் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மக்கிப்போன நெல் மூட்டைகள்
அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்தும் மக்கியும் போன போல நெல் மூட்டைகள்;
அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தகுளம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்து. முளைத்தும் மக்கிப்போன நெல் மூட்டைகள்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தகுளம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்து. முளைத்தும் மக்கிப்போன நெல் மூட்டைகள் விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில், முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நெல் விளைவிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை செய்யப்பட்டு வந்தது. தமிழக அரசு ஆங்காங்கே, நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் செய்து வந்தது.இதன் தொடர்ச்சியாக, அலங்காநல்லூர் அருகே, சின்ன இலந்த குளத்தில் கடந்த சில நாட்களாக செயல்பட்டுவந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லைவிற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொள்முதல் செய்யாததால், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்மூட்டைகள் சமீபத்தில் பெய்த கோடை மழையின் காரணமாக முற்றிலுமாக நனைந்து மக்கியும் காணப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் பெறப்பட்ட நெல் மூட்டைகளுக்கு எந்தவித பணம் வழங்காததால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.தற்போது, மழையில் நனைந்து வீணாகி வருவதால் ,இன்னும் கூடுதல் நஷ்டத்தை தருவதாக கூறுகின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் முழுவதுமாக நனைந்து மூட்டையின் அடியில் கரையான் பிடித்தும் முழுவதுமாக முளைத்தும் சில முட்டைகள் மக்கியும் காணப்படுகிறது.ஆகையால் ,உடனடியாக அரசு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த மாதிரி பாதுகாப்பின்றி உள்ளது .பல நெல் கொள்முதல் நிலையங்களில்,நெல்லை மூடி வைக்கக் கூட தார்பாய் கிடையாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.