மதுரையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
மதுரையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
மதுரையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மதுரையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான 76 மாத கால டி.ஏ., அகவிலைப்படி வழங்காததை கண்டித்து, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையை முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றார் அமைப்பு அதன் சார்பில் தேவராஜன் அவர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை வழங்கிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றியமைக்க வேண்டும், மே 2020 முதல் இறந்த மற்றும் தன் விருப்ப ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தினால், போக்குவரத்து பணிமனை பணிகள் பாதிக்கப்பட்டது.