மதுரை அருகே தோப்பூரில் சீரமைக்கப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி திறப்பு
மதுரை அருகே தோப்பூரில் சீரமைக்கப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியை ஆட்சியர் அனீஸ்சேகர் திறந்து வைத்தார்
தோப்பூரில், சீரமைக்கப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியை திறந்து வைத்த மதுரை மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை அருகேயுள்ள தோப்பூர் கொரோனா சிகிச்சை மையம் திறந்து வைக்க வருகை தந்தபோது, தோப்பூர் உயர்நிலைப்பள்ளியை சீரமைக்க வேண்டி மாணவர் முத்துவளவன் மனு அளித்தார். அதன் அடிப்படையில், ரூ.23 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட புனரமைக்கப்பட்ட தோப்பூர் உயர்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர் திறந்து வைத்து, முதலமைச்சரிடம் மனு அளித்த மாணவர்க்கு நூல்கள் வழங்கி பாராட்டினார்.