மதுரை மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தில் கடைகள் அகற்றம்
Removal of shops in the new hall of Madurai Meenakshiamman Temple;
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்திற்குள், மண்டபங்களில் அமைந்திருந்த கடைகள் திருக்கோயிலின் கலையழகு அம்சங்களை மறைப்பதால், அவற்றை அகற்ற தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959, பிரிவு 80ன் கீழ் ,மதுரை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முன்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டதில், அக்கடைகள் மீது வெளியேற்று நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
மேற்படி, உத்தரவை எதிர்த்து ஆணையர் முன்பு மேற்படி கடைகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யபட்டபடியால், 54 கடைகளை திருக்கோயில் வளாகத்திலிருந்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு, கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. கடைகளின் புற அமைப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. .