மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உணவகம் அகற்றம்

மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து நடத்திய உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர்

Update: 2022-05-13 07:30 GMT

ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சி அதிகாரிகள்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருந்த மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து நடத்திய உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம்  அகற்றினர்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70வது வார்டு பைபாஸ் சாலை வானமாமலை நகர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய வலியுறுத்தி பலமுறை நோட்டீஸ் கொடுத்தும்  காலி செய்யவில்லை. இதையடுத்து   மாநகராட்சி அதிகாரிகள்  அதிரடியாக ஜேசிபி இயந்திரம் கொண்டு அங்குள்ள பொருட்களை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.

மாநகராட்சி அதிகாரி கூறுகையில், இந்த இடத்தில் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்ட உள்ளதாகவும், இவரிடம் பலமுறை நோட்டீஸ் கொடுத்து இவர் காலி செய்ய மறுத்ததால், அதிரடியாக ஆக்கிரமிப்பை அகற்றினோம் எனத் தெரிவித்தனர்.

Tags:    

Similar News