வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் குவிந்த உறவினர்கள்
இலங்கை மற்றும் துபாயில் இருந்து தாயகம் திரும்பிய பயணிகளை வரவேற்க குடும்பத்தினர் வந்ததால் கூட்டமாக காணப்பட்டது;
மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் துபாய் மற்றும் இலங்கையிலிருந்து வந்த பயணிகவரவேற்க வந்த குடும்பத்தினர்
மதுரை விமான நிலையத்தில் இன்று இலங்கை மற்றும் துபாயில் இருந்து தாயகம் திரும்பிய பயணிகளை வரவேற்க ஏராளமான குடும்பத்தினர் வந்ததால் விமான நிலையம் மக்கள் கூட்டமாக காணப்பட்டது .
கடந்த சில வாரங்களாக இலங்கை மற்றும் துபாயில் இருந்து விமான சேவை துவங்கப்பட்டது. ஆனால், தீபாவளி பண்டிகையையொட்டி, வெளிநாட்டிலிருந்து மதுரை வந்ததால் அவர்களை வரவேற்க வந்த உறவினர்களால் விமான நிலையம் கூட்டமாக காணப்பட்டது. கடந்த வாரங்களில் பயணிகள் குறைந்த அளவிலேயே வருகை தந்தனர். அப்பொழுது, ஒரே நேரத்தில் இரண்டு விமானங்களும் வந்ததால், நானூறுக்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்ததால் அவர்களை வரவேற்க வந்த உறவினர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..