மதுரை அருகே ராஜ்யசபா எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியில் தார்ச்சாலை

மதுரை அருகே ஒன்றிய கவுன்சிலர் பரிந்துரைப்படி ராஜ்யசபா எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.;

Update: 2023-11-06 08:12 GMT

மதுரை அருகே புதிய தார்ச்சாலை அமைக்கும்பணியை ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜா பார்வையிட்டார்.

மதுரை அருகே ராஜ்ய சபா எம்.பி. நிதியிலிருந்து புதிய தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம்   திருப்பரங்குன்றம் அருகே விரகனூரில் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜன், பரிந்துரையில், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், நிதி ஒதுக்கீடில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விரகனூரில், உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் சாலை வசதியில் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இது குறித்து டீச்சர்ஸ் காலனி பொதுமக்கள் தங்களது  கோரிக்கையை, ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜனிடம் எடுத்துக்கூறி சாலை அமைக்க வேண்டுகோள் வைத்தனர்.

இதனையடுத்து, ராஜ்யசபா உறுப்பினர் தர்மர் நிதி உதவியின் பேரில், ஒன்றிய கவுன்சிலர் பார்த்திப ராஜன் பரிந்துரையின்படி ஒரு கோடி மதிப்பிலான டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள சாலையை அமைக்கும் பணி நடைபெற்று முடிவற்றது.

இதனைத் தொடர்ந்து, நேற்று சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜன். விரகனூர் பஞ்சாயத்து டீச்சர்ஸ் காலனி வார்டு உறுப்பினர் கணேசன், பஞ்சாயத்து செயலாளர் ராஜாமணி ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News