மதுரை விமான நிலையத்தில் ராபிட் பரிசோதனை: துபை செல்லும் பயணிகள் காத்திருப்பு
ராபிட் டெஸ்ட் ரிசல்ட் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் 44 பேர் மதுரையிலிருந்து துபை செல்வது தாமதமாகும் நிலை உருவானது
மதுரை விமான நிலையத்தில் துபாய் செல்ல வேண்டிய பயணிகளுக்கான ராபிட் டெஸ்ட் தாமத்தினால் 2 1/2 மணிநேரம் காத்திருக்க நேரிட்டது. 172 பயணிகளில் 44 பேர் ராபிட் டெஸ்ட் தாமத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் இன்று (01.10.21) முதல் மதுரையில் இருந்து துபைக்கு விமானம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரானா பெருந்தொற்று காரணத்தினால், கடந்த ஆறு மாதமாக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானம் செல்லவில்லை. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் இயக்கப்படும் விமானத்தில் துபை செல்லும் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
முன்பதிவு செய்திருந்த 180 பயணிகள் இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர்.சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, அனைவரும் கொரோனா ராபிட் டெஸ்ட் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . அதன்படி, துபை செல்ல ஆறு மணி நேரத்திற்கு முன்பாக ராபிட் டெஸ்ட் எடுக்க வேண்டும் . இதற்காக பயணிகள் மதுரை விமான நிலையத்தில் உள்ள நேஷனல் லேப் நிறுவனம் மூலம், ராபிட் டெஸ்ட் எடுத்தனர். இதில்,172 பயணிகளுக்கு ராபிட் டெஸ்ட் எடுக்கப்பட்டது . இதன் முடிவுகள் வர தாமதமானதால், காலை 11 மணிக்கு புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் 2 1/2 மணி இரண்டரை மணி நேர தாமதமாக பகல் ஒன்றரை மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும், ராபிட் டெஸ்ட் ரிசல்ட் தாமதத்தினால் 44 பேர் மதுரையிருந்து துபை செல்வது தாமதமாகும் நிலை உருவானது. ராபிட் டெஸ்டிற்கு ரூ. 2112 என வசூலித்த நிலையில், தாமதமான ரிஸல்ட் வந்ததால், இவர்கள் துபை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.