வாடிப்பட்டி அருகே சாலையில் கிடக்கும் மின்சாரக் கம்பிகள்: மின்வாரியம் நடவடிக்கை தேவை ?

Public Demanded EB Department Action வாடிப்பட்டி அருகே ஆபத்தான நிலையில் மின்ஒயர்கள் ரோட்டில் விழுந்து கிடக்கிறது. ஆபத்தைக் கண்டுகொள்ளாத மின்சார வாரியத்தினை நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-20 10:07 GMT

மின்சார வயர்கள் அறுந்து கீழே விழுந்துள்ளது. உயிர்ப்பலி ஏற்படும் முன் மின்வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?...

Public Demanded EB Department Action

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தும்பச்சம்பட்டி கிராமத்தில், கோவிந்தராஜ் என்பவரது கிணற்றுக்கு அருகில் கடந்த நான்கு நாட்களாக மின்கம்பத்தில் மின் ஒயர்கள் தனியாக தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 

, இந்த ஒயர்கள்விவசாய வேலைகளுக்காக செல்பவர்கள் மீது பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளதாக இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து, மின்சார வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்த போது, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை திறப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வருவதால் பணியாளர்கள் அனைவரும் அங்கு சென்று விட்டனர். 24 ஆம் தேதிக்கு பின்னரே மின்சார ஒயர்களை சரி செய்ய முடியும் என்று பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக தெரிவித்தனர். ஆகையால், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆபத்தான நிலையில் உள்ள மின் ஒயர்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.

தரையில் கிடக்கும் மின்சார ஒயர்களால் ஆபத்து ஏற்பட்டால், மின்வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.உயர் அதிகாரிகளே இது போல் பதில் அளிப்பது பெரும் அச்சத்தினை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News