சோழவந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கல்
சோழவந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கினார்.
சோழவந்தான் பேருந்து நிலையத்தை தவறாக தி்ட்டமிட்டு முந்தைய அதிமுக ஆட்சியினர் கட்டியதால் பேருந்துகள் வர முடியவில்லை என வெங்கடேசன் எம் எல் ஏ குற்றம் சாட்டினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலை இல்லா மிதி வண்டிகளை மாணவிகளுக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கினார்.
பின்னர் மாணவிகளிடத்தில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேசும்போது: சோழவந்தானில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம்.
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் அமைச்சரிடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் தொடர்ந்து முயற்சி செய்து ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களின் பயன் பாட்டிற்காக திறந்து விட்டோம்.
ஆனால், சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவதில்லை என, பொது மக்கள் தரப்பில் தொடர் புகார் வருவதாக கூறுகின்றனர்.
இதற்கு முந்தைய ஆட்சியாளர்களின் தவறான திட்டமிடுதலே காரணம் எந்த ஒரு முன் உதாரணமும் இன்றி தவறான திட்டமிடுதலால் சோழவந்தான் பேருந்து நிலையம் கட்டியதால் பேருந்துகள் உள்ளே வர முடியாத சூழ்நிலை உள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும் என்றார்.
சோழவந்தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில் 80 சதவீத பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வர முடியாத சூழ்நிலை உள்ளதாக பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் சோழவந்தானில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெங்கடேசன் எம். எல். ஏ. பேருந்து உள்ளே வராததற்கு முந்தைய அதிமுக ஆட்சியினரே காரணம் என, குற்றம் சாட்டி பேசியுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.