மதுரை அவனியாபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

Crime News In Tamil- மதுரை அவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை காரில் கடத்தி வந்த இருவர் கைது;

Update: 2022-07-23 10:30 GMT

மதுரை அவனியாபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை கடத்தி வந்த கார் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது

Crime News In Tamil- அவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையுடன் இருவர் கைது செய்து அவர்களிடமிருந்த பணம் ரூ 15, ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை அவனியாபுரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மதுரை அவனியாபுரம் போலீசாருக்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது . இதனை யடுத்து, அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது , அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்துக்கிடமான  வகையில்  வந்த காரை வழிமறித்து போலீஸார் சோதனையிட்டனர். காரில், தடை செய்யப்பட்ட 124 கிலோ புகையிலை பொருள்கள் கடத்தி வந்ததைக்  கண்டுபிடித்தனர். இதையடுத்து காரில் இருந்த இரு நபர்களை பிடித்து விசாரித்ததில் , அவனியாபுரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது  தெரியவந்தது.

மேலும் ,அவர்கள் வைத்திருந்த ரூபாய் 15,000 மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலையும் விற்பதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் ,விசாரணையில் மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மகன் ராஜா( 42). மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் பாலமுருகன் ( 36). என்பது தெரியவந்தது.  இருவரையும், அவனியாபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News