மதுரையிலிருந்து பெங்களூர் செல்ல வேண்டிய விமானத்தில் கோளாறு

விமானம் புறப்பட தயாரான நிலையில், இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது;

Update: 2023-08-19 09:00 GMT

அலங்காநல்லூரில்  த.மா.கா. சார்பில் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் நிறுத்தி வைப்பு

மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.பெங்களூரில் இருந்து மதுரை வந்த இன்டிகோ விமானம் காலை 8:30 மணி அளவில் மதுரை வந்தடைந்தது. மதுரையில் இருந்து 68 பயணி களுடன் பெங்களூர் செல்ல வேண்டிய விமானம் பயணிகள் ஏறி புறப்பட தயார் நிலையில், இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பயணிகள் மாற்று வழியாக 63 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.4 பயணிகள் டெல்லி செல்லும் விமானம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருபயணி பணத்தை திரும்ப பெற்று விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார் ..

 மூப்பனார் பிறந்தநாள் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மரியாதை 

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ,மக்கள் தலைவர் மூப்பனாரின் 92-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.தனுஷ்கோடி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில், மாநில பொது செயலாளர் பழனிவேல், மாநில செயலாளர் பரத் நாச்சியப்பன், மாவட்ட துணைத் தலைவர்கள் பால்ச்சாமி, சிவா, கருப்பையா, கச்சைகட்டி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர்கள் புதுப்பட்டி கார்த்திக், முரளி, வாடிப்பட்டி பாலசரவணன், பொதும்பு செல்வம், பரவை பேரூர் தலைவர் முத்துராமன், அலங்காநல்லூர் பேரூர் பால்பாண்டி, ரமேஷ், ரசூல், முத்துகாமாட்சி, மாணவரணி சௌந்தர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை அருகே தொல்லியல் பாதுகாப்பு மன்றம் தொடக்கம்:

மதுரை பசுமலை மேல் நிலைப் பள்ளியில், நடைபெற்ற தொன்மை மற்றும் தொல்லியல் பாதுகாப்பு மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியையும் ,மதுரை, முகவை திருமண்டலத்தின் பேராயரம்மாவுமான மேரி, தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மன்றச் செயலாளர் மோசஸ் ராஜன் வரவேற்றார், இணைச் செயலாளர் அருள் தேவபாலன் நன்றி கூறினார். அலெக்ஸ், விழாவினை ஒருங்கிணைத்தார்.

Tags:    

Similar News