மதுரையில் நள்ளிரவில் பயணிக்கும் லாரி ஓட்டுனர்களுக்கு தேனீர் வழங்கும் போலீஸார்
மதுரை மாவட்டத்தில் 4 வழிச்சாலையில் நள்ளிரவில் பயணிக்கும் லாரி ஓட்டுனர்களுக்கு டிஎஸ்பி தலைமையில் போலீஸார் தேனீர் வழங்கினர்
மதுரை மாவட்டத்தில் 4 வழிச்சாலையில் நள்ளிரவில் செல்லும் லாரி டிரைவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீஸார் தேனீர் வழங்குகின்றனர்.
மதுரை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் போலீஸார் இரவு பணியின் போது நள்ளிரவில் 4 வழிச்சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை முகம் கழுவ செய்து அவர்களுக்கு தேனீர் வழங்கி, முகக் கவசம் கொடுத்து, வழியனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே போல் இரவு பணியின் போது கொடிக்குளம் 4 வழிச்சாலையில் நள்ளிரவில் வரும் லாரி, வேன் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தர் சொல்லி ஓட்டுனரை முகம் கழுவச் செய்து தேனீர் அளித்து , முக கவசமும் கொடுத்து , தூக்கம் வந்தால் வாகனத்தை நிறுத்தி சிறிது நோரம் தூங்கி ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் பயணத்தைத் தொடர வேண்டுமென பரிவுடன் அறிவுறுத்தினார். மேலும் லாரிகளில் டூல்ஸ் எல்லாம் சரியாக வைத்திருக்கும் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டி சென்றால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.இந்த காவல் அதிகாரியின் செயலுக்கு தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கனரக வாகனங்கள் வந்தாலே போதும் வாகனத்தை நிறுத்தி லைசென்சை எடு, ஆர்.சி. புக்கை எடு என மிரட்டல் குரல் கொடுக்கும் சம்பவத்தை பார்த்து வரும் ஓட்டுனர்களை போலீஸாரின் இந்த மனித நேயச்செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.